உத்தரகாண்டில் பழிவாங்கும் நடவடிக்கையாக 3 சிறுத்தைகளை விஷம் வைத்து கொலை செய்தவர் கைது
உத்தரகாண்டில் பழிவாங்கும் நடவடிக்கையாக 3 சிறுத்தைகளை விஷம் வைத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ஹரித்துவாரில் ராஜானி தேசிய பூங்காவில் கடந்த 5-ம் தேதி 3 சிறுத்தைகள் இறந்து கிடந்தது. சிறுத்தைகளின் சடலத்தை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்ட போது விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. சிறுத்தையின் வயிற்றுக்குள் நாய்க்கறி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த சுக்பால் என்பவர் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. வனப்பகுதியருகே வசிக்கும் சுக்பால் இருநாய்களை வளர்த்து வந்துள்ளார். அவைகளை சிறுத்தை தாக்கியதில் ஒரு நாய் இறந்துவிட்டது. மற்றொன்று படுகாயங்களுடன் உயிர் பிழைத்தது. இறந்த நாயின் சடலத்தில் விஷத்தை வைத்து சிறுத்தைகளை கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுக்பாலை கைது செய்த வனத்துறையின் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story