‘பாரத ரத்னா’ விருது பிரணாப் முகர்ஜிக்கு பொருத்தமான அங்கீகாரம் - பிரதமர் மோடி பாராட்டு


‘பாரத ரத்னா’ விருது பிரணாப் முகர்ஜிக்கு பொருத்தமான அங்கீகாரம் - பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 10 Aug 2019 12:45 AM IST (Updated: 10 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

பாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜிக்கு பொருத்தமான அங்கீகாரம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்றுமுன்தினம் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது, நாட்டுக்கு நீங்கள் ஆற்றிய சேவைக்கு பொருத்தமான அங்கீகாரம். அதை நீங்கள் வாங்கியதை நான் நேரில் பார்த்தது எனக்கு கிடைத்த பெருமை. இந்தியாவை வளர்ந்த நாடாக்க நீங்கள் ஆற்றிய பணிக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story