ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவை கட்டணம் - ரெயில்வே வாரியம் முடிவு
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சேவை கட்டணம் வசூலிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
தொலைதூர பயணத்துக்கு பொதுமக்கள் அதிகம் விரும்புவது ரெயில் பயணத்தை தான். இந்தியா முழுவதும் ஏராளமானோர் தினமும் ரெயில்களில் பயணம் செய்கின்றனர். இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட் (இ-டிக்கெட்) முன்பதிவு செய்யலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணி ஒருவருக்கு ரூ.40-ம், சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிக்கு ரூ.20-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
டிஜிட்டல் பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. சேவை கட்டணம் வசூலிக்கப்படாததால் கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் 26 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், தற்போது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Related Tags :
Next Story