சோனியா காந்தியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு - கட்சிக்கு இன்று தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?


சோனியா காந்தியுடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு - கட்சிக்கு இன்று தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?
x
தினத்தந்தி 10 Aug 2019 4:32 AM IST (Updated: 10 Aug 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

சோனியா காந்தியை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்தநிலையில், கட்சிக்கு இன்று தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டியும் மூத்த உறுப்பினர்கள் குழுவை இதற்காக அமைத்துள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று சோனியா காந்தியை மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

கட்சி தலைவர் பதவிக்கு முகுல்வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சில இளம் தலைவர்கள் பெயர்களும் அடிபடுகிறது. அபிஷேக் சிங்வி கூறும்போது, “சனிக்கிழமை (இன்று) காங்கிரஸ் தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை” என்றார்.

Next Story