கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி


கேரளாவுக்கு உதவுவதாக மோடி தெரிவித்துள்ளார்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 12 Aug 2019 9:03 AM IST (Updated: 12 Aug 2019 9:03 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு உதவுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு,

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ராகுல் காந்தி நேற்று வருகை தந்தார். கேரளாவில் முகாமிட்டுள்ள ராகுல் காந்தி, தனது சொந்த மக்களவை தொகுதியான வயநாட்டில் வெள்ள சேத பகுதிகளை நேற்று மாலை பார்வையிட்டார். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் வெள்ள சேத பகுதிகளை  ராகுல் காந்தி பார்வையிட உள்ளார்.

முன்னதாக நேற்று வயநாடு செல்லும் முன்பு மலப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் கந்தி கூறியதாவது:- “ இது ஒரு துயரமான சம்பவம், அனைவரும் கேரளாவுக்கு உதவ வேண்டும். நான் பிரதமரிடம் உதவி கேட்டுள்ளேன். அவர் உதவ ஒப்புக் கொண்டார்"  என்றார்.


Next Story