காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது - பிரகாஷ் ஜவடேகர்


காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது  - பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 12 Aug 2019 8:16 PM IST (Updated: 12 Aug 2019 8:16 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் ‘பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே 370வது பிரிவு பயன்பட்டது என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


 
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370–ஐ மத்திய அரசு ரத்து செய்தது. 

இது தொடர்பாக காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்த பிரிவு பயன்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு உள்ளதால், அந்த மாநில மக்கள் இனிமேல் பிற மாநிலத்தவர்கள் பெற்று வரும் உரிமைகளை பெறுவார்கள். அந்த மாநில வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும்’ என்று தெரிவித்தார்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக 370–வது பிரிவின் விலங்குகளில் இருந்து காஷ்மீர் மக்களுக்கு விடுதலை அளிக்க காங்கிரஸ் தவறிவிட்டதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது கூட இந்த பிரிவை ரத்து செய்வதில் அந்த கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும், தேசிய நலன் சார்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் முடிவில் கூட அந்த கட்சியினரால் இணைந்து செயல்பட முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

Next Story