டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - 70 நிமிடங்கள் விமான சேவை பாதிப்பு


டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - 70 நிமிடங்கள் விமான சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 1:06 AM IST (Updated: 13 Aug 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி விமான நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, 70 நிமிடங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் வெடிகுண்டு புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 8:49 மணிக்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர் விமானநிலையத்தில் 2-வது முனையத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதை தொடர்ந்து உடனடியாக போலீஸ் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அனைத்து பயணிகளும் புறப்படும் சமயத்தில் கேட் எண் 4 க்கு மாற்றப்பட்டனர். வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணிகள் அதே விமானத்திலேயே அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் சுமார் ஒரு மணி நேர முழுமையான தேடல் நடவடிக்கைக்குப் பிறகு, அந்த தொலைபேசி அழைப்பு ஒரு புரளி என்று உறுதிசெய்யப்பட்டது.

10 மணிக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையம் 70 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story