சுற்றுச்சூழல் அனுமதியின்றி ‘கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி


சுற்றுச்சூழல் அனுமதியின்றி ‘கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது’ - தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 9:11 PM GMT)

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

புதுடெல்லி,

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுக்குழு அளித்துள்ள பரிந்துரை அறிக்கையை பரிசீலித்துத்தான் இந்த உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. அந்த பரிந்துரை அறிக்கையில், “இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை ஆராய்ந்தோம். நேரடி கள ஆய்வு செய்தோம். அங்கு எந்தவொரு கட்டுமானப்பணி செய்ய வேண்டும் என்றாலும் முதலில் சுற்றுச்சூழல் அனுமதி தேவை. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான சட்டப்பூர்வமான சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும்” என கூறப்பட்டிருக்கிறது.

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகளை இணைத்தால் தமிழ்நாட்டின் தென்கோடி வரையில் தண்ணீர் கிடைக்கும் என்று ஏற்கனவே மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி அளித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story