சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்


சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்
x
தினத்தந்தி 14 Aug 2019 9:31 AM IST (Updated: 14 Aug 2019 9:31 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.  இதையடுத்து, அங்கு வன்முறை எதுவும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கவனர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.  மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியேற்ற இருப்பதாக வெளியான தகவலையும் கவர்னர் சத்யபால் மாலிக் மறுத்தார். 

Next Story