காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி; தயார் நிலையில் இந்தியா


காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி; தயார் நிலையில் இந்தியா
x
தினத்தந்தி 14 Aug 2019 8:35 PM IST (Updated: 14 Aug 2019 8:35 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை எதிர்ககொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது.

ஜம்மு,

இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி பிரிவில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர்.  இதனை இந்திய ராணுவம் முறியடித்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும் தங்களது நிலைகளில் இருந்து கொண்டு இந்தியாவை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியது.

இதனிடையே இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது.  அவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story