டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2019 12:24 PM IST (Updated: 15 Aug 2019 12:24 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அரசு பேருந்துகளில் அக்.29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  கெஜ்ரிவால் கூறும் போது,  ரக்‌ஷா பந்தன் தினமான இன்று, நமது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை அளிக்கிறேன்.

  டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாதாந்திர கட்டண செலுத்து முறையில் இயங்கும் கிளஸ்டர் பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யலாம்” என அறிவித்துள்ளார். 


Next Story