காஷ்மீர் : பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - இந்தியா பதிலடி
காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பூஞ்ச்
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கேஜி துறையில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.
வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங்
கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது. இங்கு இந்திய இராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது & இதுபோன்ற அனைத்து முயற்சிகளையும் எங்களால் தோல்வி அடைய செய்ய முடிந்தது என கூறினார்.
Related Tags :
Next Story