சுதந்திர தின விழா: பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு


சுதந்திர தின விழா: பிரதமர் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 16 Aug 2019 4:00 AM IST (Updated: 16 Aug 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரைக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, “பிரதமர் உரை ஈர்க்கும்வகையில் இருந்தது. புதிய இந்தியாவை கட்டமைக்கும் அவரது உறுதியை பிரதிபலிக்கிறது. மோடி தலைமையில் இந்தியா, வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் பிறந்துள்ளது” என்று கூறினார்.

மத்திய மந்திரி கிரிராஜ் சிங், “மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த பிரதமர் வலியுறுத்தியது, தேசபக்தியின் வெளிப்பாடு. அது நிச்சயம் நடக்கும்” என்று கூறினார். மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான், “மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துமாறு பிரதமர் பேசியதற்கு நன்றி. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதை எந்த சாதியுடனோ, மதத்துடனோ முடிச்சு போட்டு பார்க்கக்கூடாது” என்று கூறினார்.

Next Story