நாட்டில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன -மன்மோகன் சிங் வேதனை

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கையால் சகிப்புதன்மையற்ற நிலை மத அடிப்படையில் மக்களை தனிமைப்படுத்தும் செயல் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறை தாக்குதல், குழு தாக்குதல் போன்ற விரும்பத்தகாத செயல்கள் நமது அரசியலை சேதப்படுத்தும். இது நாட்டின் அரசியல் முறைக்கு உகந்தது அல்ல.
நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளது. நம் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை விட வேறு எதுவும் முக்கியமில்லை. இந்தியாவை பிரிக்க முடியாது. மதச்சார்பின்மை என்பது நமது தேசத்தின் அடிப்பகுதி. இது சகிப்புத்தன்மையை விட அதிகமாக குறிக்கும். சகிப்புதன்மை, மக்களை தனிமைப்படுத்தும் செயல், குழு தாக்குதல் போன்றவை அரசியலை சேதப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story