சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என தகவல்


சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என தகவல்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:50 AM GMT (Updated: 21 Aug 2019 1:40 PM GMT)

சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அவரது தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தொடர் இழுபறி ஏற்பட்டது. மனுதொடர்பாக இன்று விசாரணையில்லையென தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிபிஐயும், அமலாக்கப்பிரிவும் ப.சிதம்பரத்தை கைது செய்யவே தேடுகிறது என விசாரணை முகமைகளின் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.  

டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நேற்று நிராகரித்தபோது ப.சிதம்பரம் வழக்கறிஞர்கள் குழுவுடன் உச்சநீதிமன்றத்தில் இருந்ததார் எனவும், அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் செல்போனை அணைத்துவிட்டார் எனவும், கார் டிரைவர் மற்றும் உதவியாளரிடம் சொல்லாமல் தெரிந்துக்கொள்ள முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று அவருக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story