ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- முழு விவரம்


ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- முழு விவரம்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:07 AM GMT (Updated: 1 Sep 2019 10:07 AM GMT)

கேரளா, தெலுங்கானா உள்பட ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா அங்கிருந்து மாற்றப்பட்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங்கிற்கு பதிலாக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சதாசிவம் மாற்றப்பட்டு அங்கு, ஆரிஃப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில ஆளுநராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கடந்த 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 2013-14ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவருடைய பதவிக் காலம் வரும் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Next Story