தேசிய செய்திகள்

அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை: எதிர்ப்பு தெரிவித்து பேரணி + "||" + Junior Doctors of the Assam Medical College held a candle march against the killing of a doctor

அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை: எதிர்ப்பு தெரிவித்து பேரணி

அசாமில் தொழிலாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த டாக்டர் கொலை:  எதிர்ப்பு தெரிவித்து பேரணி
அசாமில் சிகிச்சையில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் குடும்பத்தினர் தாக்கி மருத்துவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.
ஜோர்ஹத்,

அசாமில் சிகிச்சையில் உயிரிழந்த தேயிலை தோட்ட தொழிலாளியின் குடும்பத்தினர் தாக்கி மருத்துவர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது.

அசாமில் ஜோர்ஹத் நகரில் தியோக் பகுதியில் தேயிலை தோட்டமொன்று அமைந்துள்ளது.  இங்கு பணியாற்றி வந்த சோம்ரா மஜ்ஜி என்ற பெண் தொழிலாளி தேயிலை தோட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

ஆனால் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லாததே தொழிலாளி உயிரிழப்புக்கு வழிவகுத்து விட்டது என கூறி அங்கிருந்த சக தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளியின் உறவினர்கள், மருத்துவர் தேவன் தத்தா (வயது 73) என்பவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என துணை ஆணையர் கொரட்டி கூறினார்.

இந்நிலையில், அசாமின் திப்ரூகார் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியை சேர்ந்த இளநிலை மருத்துவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: மேலும் ஒரு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.
2. உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை மகன் கைது
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
3. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
4. கோவை அருகே பரிதாபம்: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. திருவள்ளூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை
திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.