உள்துறை அமைச்சர் அமித் ஷா, 8–ந்தேதி அசாம் பயணம்
உள்துறை அமைச்சர் அமித் ஷா, 8–ந்தேதி அசாம் பயணம் மேற்கொள்கிறார். தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியான பிறகு முதல் முறையாக அங்கு செல்கிறார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக 8–ந்தேதி அசாம் மாநிலத்துக்கு செல்கிறார். அவரது தலைமையில் வடகிழக்கு கவுன்சில் கூட்டம் நடக்கிறது. 8 வடகிழக்கு மாநிலங்களின் கவர்னர்களும், முதல்–மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள்.
அக்கூட்டத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டதால் எழுந்த சர்ச்சை மற்றும் அதற்கு பிந்தைய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
இதுபோல், அசாம் மாநில முதல்–மந்திரி சர்பானந்தா சோனோவாலை அமித் ஷா தனியாக அழைத்து பேசுகிறார். மாநில பா.ஜனதா நிர்வாகிகளுடன் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மத்திய உள்துறை மந்திரி ஆன பிறகு அவர் அசாம் மாநிலத்துக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
Related Tags :
Next Story