சிவில் வழக்கில் சரித்திர அடிப்படை வாதங்களுக்கு இடமில்லை - அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பு தரப்பு வக்கீல் வாதம்
சிவில் வழக்கில் சரித்திர அடிப்படையிலான வாதங்களுக்கு இடமில்லை என்று அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பு தரப்பு வக்கீல் வாதாடினார்.
புதுடெல்லி,
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருடையது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
17-வது நாளாக நேற்று முஸ்லிம் அமைப்புகள் தரப்பு வாதங்கள் தொடங்கியது. விசாரணை தொடங்கியதும் மூத்த வக்கீல் கபில்சிபல், இந்த வழக்கில் முஸ்லிம் அமைப்புகள் தரப்பு மூத்த வக்கீல் ராஜீவ் தவனுக்கு கொலை மிரட்டல் வந்திருப்பது குறித்தும், அவர் தரப்பில் கோர்ட்டு அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அந்த மனு செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மூத்த வக்கீல் ராஜீவ் தவன் வாதாடியதாவது:-
நீதித்துறையில் நாம் கடைப்பிடிக்கும் சட்டம் வேதத்தின் அடிப்படையிலான சட்டம் அல்ல. இந்தியாவில் சட்ட நடைமுறைகள் 1858-ம் ஆண்டில் அமலுக்கு வந்திருக்கிறது. பிரகாரம் வலம் வருவது என்பது ஒரு வழிபாட்டு முறையே தவிர அது எந்த வகையிலும் ஆதாரம் ஆகாது. நான் 1828-ல் இருந்து வாதங்களை தொடங்க நீங்கள் உத்தரவு பிறப்பித்தால் என்னால் அந்த இடத்தில் மசூதி இருந்தது என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நிறுவமுடியும்.
சிவில் வழக்கில் சரித்திரத்தின் அடிப்படையில் முன்வைக்கப்படும் வாதங்களுக்கு இடமில்லை. இதுதொடர்பாக பல தீர்ப்புகள் உள்ளன. ஒரு இடத்தை அதன் உரிமையாளர் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தவில்லை என்றால் அது அந்த இடத்தின் மீதான அவருடைய உரிமையை எந்த வகையிலும் பாதிக்காது.
அந்த இடத்தில் ஒரு மயில் அல்லது தாமரையின் சிற்பம் இருந்தால், மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கு பெரிய கட்டிடம் இருந்திருக்கலாம் என்ற ஊகத்துக்கு இடமில்லை. இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முன்பு நாம் வைக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததா? அங்கு ஒரு மசூதியை கட்டுவதற்காக அந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளதா? என்பது தான்.
இந்தியாவுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் அந்த இடத்தில் மசூதி இருந்ததாக எங்கும் கூறவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மார்கோ போலோ சீனப்பெருஞ்சுவர் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை. நாம் முதிர்ச்சியற்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளை எடுத்துக்கொள்ள முடியாது.
(அப்போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறுக்கிட்டு, நீங்களும் தான் சில வரலாற்று தடயங்களை உங்கள் வாதத்துக்கு எடுத்து இருக்கிறீர்கள் என்றார்)
ஒரு சொத்தை வக்பு வாரிய சொத்தாக அறிவித்தால் அல்லது வக்புக்கு சார்ந்ததாக இருந்தால் அதன் உரிமை ஆண்டவனுக்கு உரியதாகிறது. 1934-ல் சிதிலப்படுத்தப்பட்டது. 1949-ல் அத்துமீறல் நிகழ்ந்தது. 1992-ல் அது தரைமட்டமாக இடிக்கப்பட்டது. இருந்தாலும் இந்துக்கள் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வேதகாலத்தில் கோவில்கள் எதுவும் இல்லை, மடங்கள் இல்லை. சிலை வழிபாடுகளும் கிடையாது. மத நிறுவனங்கள் புத்தருடைய காலத்தில் தான் வந்தன. ஆனால் சிலை வழிபாடு எப்போது தொடங்கியது என்பதை உறுதியாக கூறமுடியாது. இவ்வாறு அவர் வாதாடினார்.
வாதங்கள் இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Tags :
Next Story