டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு
டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் இன்று சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க முடிவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இணையதள சேவை, மொபைல் சேவை முடக்கப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டு வேறு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்காத வகையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இதனிடையே, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சந்தித்து இன்று பேசினார். இந்த சந்திப்பில் ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசப்பட்டது என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story