சாலையை சீரமைக்கக்கோரி கல்லூரி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்
சாலையை சீரமைக்கக்கோரி கல்லூரி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி:
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்துக்குட்பட்ட கொடாசே என்ற கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா என்பவர் தனது கிராமத்துக்கு செல்லும் அரோடி - மண்ட்ரோலி சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், சீரமைக்க உத்தரவிடக் கோரியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதம் பிரதமரின் பார்வைக்குச் சென்றதைத் தொடர்ந்து இந்த கடிதம் கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில் மாவட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மேலும் அந்த மாணவியை அதிகாரிகள் சந்தித்து சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். அத்துடன் சிவமோகா எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோரும் மாணவியை சந்தித்து, சாலையை சீரமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
Related Tags :
Next Story