காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக ஷெஹ்லா ரஷீத் மீது தேசத்துரோக வழக்கு
காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத் மீது டெல்லி காவல்துறை தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி
370-வது பிரிவை ரத்து செய்த பின்னர் காஷ்மீர் நிலைமை குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக சமூக ஆர்வலர் ஷெஹ்லா ரஷீத் மீது டெல்லி காவல்துறை தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது.
திலக் மார்க் காவல் நிலையத்தில் வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஷீத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐபிசி பிரிவு 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு விசாரணை சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. புகாரில் குறிப்பிடப்பட்ட பெரும்பாலான டுவிட்டுகள் ஆகஸ்ட் 18 அன்று பதிவு செய்யப்பட்டவையாகும்.
Related Tags :
Next Story