திகார் சிறையில் ப.சிதம்பரத்தை பார்க்க முடியாமல் திரும்பிய காங்கிரசார்


திகார் சிறையில் ப.சிதம்பரத்தை பார்க்க முடியாமல் திரும்பிய காங்கிரசார்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 7 Sept 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை பார்க்க முடியாமல் காங்கிரசார் திரும்பினர்.

புதுடெல்லி,

ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2-வது நாளான நேற்று அவரை சிறையில் பார்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், பி.சி.சாக்கோ, மாணிக்க தாகூர், அவினாஷ் பாண்டே ஆகியோர் சென்றனர். ஆனால் பார்வையாளர்கள் நேரம் முடிந்துவிட்டதால் சிறை அதிகாரிகள் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் கூறும்போது, “கட்சி ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக இருப்பதை காட்டும்வகையில் எங்களை சிறைக்கு சென்று அவரை சந்திக்கும்படி காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். அதன்பேரிலேயே நாங்கள் அவரை சந்திக்க வந்தோம்” என்றனர்.


Next Story