பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து


பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி: பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து
x
தினத்தந்தி 7 Sept 2019 5:00 AM IST (Updated: 7 Sept 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

பலத்த மழை எச்சரிக்கை எதிரொலியாக, பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் புதிய மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதாக இருந்தார்.

ஆனால், இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. எனவே, பிரதமரின் நாக்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story