இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சந்திரனை அடையும் இந்தியாவின் கனவை நனவாக்கும் -பிரதமர் உறுதி
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி இயக்கத்தை பிரதமர் மோடி மும்பையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மும்பை
சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பார்வையிட்ட பிரதமர் இன்று காலை பெங்களுரில் இருந்து புறப்பட்டு மும்பை சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மும்பை விலே பார்லேவில் உள்ள லோகமான்ய சேவா சங்க திலக் கோவிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரயில் பெட்டி இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மும்பையில் 42 கிலோமீட்டர் தூரத்துக்கான மேலும் 3 மெட்ரோ வழித் தடங்களுக்கான திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி கூறியதாவது:-
இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியம் மற்றும் மன உறுதியைக் கண்டு நான் வியந்தேன். கடுமையான சவால்களையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி எவ்வாறு முன்னேறுவது என நான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சந்திரனை அடையும் இந்தியாவின் கனவை நனவாக்கும். சந்திரனை அடைய வேண்டும் என்ற கனவை நாம் உணர்ந்து உள்ளோம். இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் நோக்கத்தை அடையும் வரை நிறுத்த மாட்டார்கள் என கூறினார்.
Related Tags :
Next Story