தேசிய செய்திகள்

அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு + "||" + AFPSA extended for six months from Aug 28 in Assam

அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

அசாமில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
அசாமில் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி, 

அசாமில் அண்மையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல்  வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஏறத்தாழ 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக பெரும் சர்ச்சை எழுந்தது. எனினும், இறுதிப்பட்டியலில் இடம்  பெறாதவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கப்பட மாட்டாது என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், அசாமில் ஆயுதப்படையினருக்கு வழங்கப்படும் சிறப்பு சட்டத்தை  (அப்சா) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அசாம் அரசு  அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலவும் பதட்டமான பகுதி என்று அறிவித்து இந்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது.

நாட்டில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் அமல்படுத்தப்படும் ஆயுதப்படை சிறப்பு சட்டமானது, ஆயுதப்படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை  வழங்குகிறது. அதன்படி, பொதுஒழுங்கை பரமாரிக்கும் பொறுப்பு அளிக்கப்படுவதுடன், எவரையும் கைது செய்யவும் எப்பகுதியிலும் சோதனை நடத்தவும் ஆயுதப்படையினருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவ்வப்போது  சர்ச்சைகள் எழுவது குறிப்பிடத்தக்கது. 1990-ம் ஆண்டு முதல் இந்தச் சட்டம் அசாமில் நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் மீது போலீசில் புகார்
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்
அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை அடையாளம் காணும் வகையில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
3. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியீடு
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியாகிறது. இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
4. அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு பட்டியல் நாளை வெளியீடு, பதற்றத்தில் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்!
அசாம் குடிமக்கள் தேசிய பதிவேடு பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.
5. இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் - அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ.
இந்து கடவுள் கிருஷ்ணா போன்று புல்லாங்குழல் ஊதினால் பசு அதிகமாக பால் கொடுக்கும் என அசாம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.