நீங்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான் - கேரள ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்


நீங்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான் - கேரள ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்
x
தினத்தந்தி 8 Sept 2019 3:33 AM IST (Updated: 8 Sept 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

நீங்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என கேரள ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

புதுடெல்லி,

கேரளாவில் மலங்கரா கிறிஸ்தவ ஆலயத்தின் கீழ் உள்ள தேவாலயங்கள் மற்றும் அதன் 1,100 வட்டார பங்குகளை நிர்வகிப்பது, பிரார்த்தனைகள் நடத்துவது தொடர்பாக இரு பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டு அந்த உரிமையை ஆர்தோடாக்ஸ் பிரிவுக்கு வழங்கி உத்தரவிட்டது. ஆனால் சமீபத்தில் கேரள ஐகோர்ட்டு, இரு பிரிவினரும் மாறி, மாறி அந்த பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா ஆகியோர் கடும் கோபம் அடைந்தனர். பின்னர் அவர்கள், “இது மிகவும் ஆட்சேபனைக்குரிய உத்தரவு. யார் அந்த நீதிபதி? எங்கள் முடிவுகளை மாற்றி அமைக்க ஐகோர்ட்டுக்கு எந்த உரிமையும் இல்லை. இது அதிகபட்ச நீதித்துறை ஒழுங்கீனம். கேரள நீதிபதிகளிடம் சொல்லுங்கள், அவர்களும் இந்தியாவின் ஒரு பகுதி தான்” என தெரிவித்தனர்.

Next Story