வீட்டுக்கடன்கள், வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ.


வீட்டுக்கடன்கள், வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ.
x
தினத்தந்தி 9 Sept 2019 1:11 PM IST (Updated: 9 Sept 2019 1:11 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கடன்கள், வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

மும்பை, 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.25 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மார்ஜினல் காஸ்ட் என்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, ஸ்டேட் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் (செப்டம்பர் 10-ம் தேதி) அமலுக்கு வரும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

இதன் மூலம் வீடு, வாகனக் கடன், உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் குறைகிறது. அதுபோலவே வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 10 முதல் 25 பைசா வரையில் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5-வது முறையாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.

Next Story