இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண் விமானி ஆனார்
இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண் ஒருவர் விமானி ஆனார்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அனுப்பிரியா லக்ரா (வயது 23). இவரது தந்தை மரினியாஸ் லக்ரா. இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தாய் யாஸ்மின். சிறு வயதிலேயே விமானத்தில் பறக்க வேண்டும் என்பது அனுப்பிரியாவிற்கு கனவாக இருந்து வந்தது.
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் விமானத்தில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவால் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். 2012-ம் ஆண்டு விமான பயிற்சி அகடாமியில் சேர்ந்து பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தில் அவருக்கு துணை விமானியாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக விமானத்தை இயக்கும் பழங்குடியின பெண் என்ற பெருமை அனுப்பிரியாவிற்கு கிடைத்து உள்ளது.
இதுபற்றி ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில், “அனுப்பிரியாவின் சாதனை பற்றி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மூலம் அடைந்த வெற்றி மற்ற பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனுப்பிரியாவின் பெற்றோரும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்கள்.

Related Tags :
Next Story