"ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி


ஆழமான படுகுழியில் பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி
x
தினத்தந்தி 10 Sept 2019 12:59 PM IST (Updated: 10 Sept 2019 12:59 PM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரம் மந்தநிலையின் "ஆழமான படுகுழியில்" வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எப்போது மோடி அரசு "கண்களைத் திறக்கும்" என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

கடந்த காலாண்டில் வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்த பின்னர் மத்திய அரசை   எதிர்க்கட்சிகள்  கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி வாதேரா தனது  ட்விட்டரில் வெளியிட்டு உள்ள  பதிவில்  கூற இருப்பதாவது:-

பொருளாதாரம் மந்தநிலையின் ஆழமான படுகுழியில் விழுகிறது. லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தில்  கத்தி தொங்குகிறது ” என்று  பிரியங்கா காந்தி இந்தி மொழியில்  ட்வீட் செய்து உள்ளார். 

மேலும் வாகனத்துறை மற்றும் டிரக் துறையின் சரிவு, உற்பத்தி-போக்குவரத்தில் எதிர்மறையான வளர்ச்சியையும், சந்தையின் நம்பிக்கையும் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும். மத்திய அரசு  எப்போது கண்களைத் திறக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேட்டு உள்ளார்.


Next Story