ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது பரிதாபம்


ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் சாவு: விநாயகர் சிலை கரைக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 11 Sept 2019 1:59 AM IST (Updated: 11 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலை கரைக்க சென்றபோது, ஏரியில் மூழ்கி 6 சிறுவர்-சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்,

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் மரதகட்டா கிராமத்தை சேர்ந்த 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் 8 பேர் நேற்று அந்தப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்கள் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்தனர்.

அப்போது ஏரியில் களிமண் எடுத்து அவர்கள் விநாயகர் சிலை செய்தனர். பின்னர் அந்த சிலையை அங்குள்ள ஏரியில் கரைப்பதற்காக கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் 6 சிறுவர், சிறுமிகள் ஏரியில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 பேரும் அளித்த தகவலின்பேரில் பொதுமக்கள் அவர்களை மீட்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிய மற்ற 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்களும் உயிரிழந்தனர்.

Next Story