தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர் + "||" + hold poll to pick next cong chief tharoor

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர்

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்:  சசி தரூர்
காங்கிரஸ் செயற் குழு உள்பட அனைத்து முக்கியப் பதவிகளுக்கும் தேர்தல் அவசியமானது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உள்பட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் அவசியம் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிதரூர் கூறுகையில், “ தற்காலிகத் தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டது சரியான ஒன்று. இதற்கு முன்பு கட்சித் தலைவராக இருந்ததுடன், பல்வேறு சவால் நிறைந்த சூழ்நிலைகளை திறம்பட கையாண்டவர் சோனியா காந்தி. கட்சியில் பல்வேறு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் செயற்குழுத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகும். உள்கட்சித் தேர்தலால் கட்சிக்கு புதிய உத்வேகம் கிடைக்கும். 2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி கூடியுள்ளது. பிரதமர் மோடி நல்லது செய்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர்.  நாம் விமர்சிக்கும் போது உண்மைத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி - சரத்பவார் அறிவிப்பு
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் அறிவித்து உள்ளார்.
2. மராட்டிய சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 125 தொகுதிகளில் போட்டி
மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று சரத்பவார் தெரிவித்து உள்ளார்.
3. ”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
4. நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகல்
நடிகை ஊர்மிளா காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
5. "ஆழமான படுகுழியில்" பொருளாதாரம்; மோடி அரசு எப்போது கண்களை திறக்கும் - பிரியங்கா காந்தி கேள்வி
பொருளாதாரம் மந்தநிலையின் "ஆழமான படுகுழியில்" வீழ்ச்சியடைந்து வருவதாகவும், எப்போது மோடி அரசு "கண்களைத் திறக்கும்" என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.