காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கை: இந்தியா நிராகரிப்பு


காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கை:  இந்தியா நிராகரிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 3:29 AM GMT (Updated: 11 Sep 2019 3:29 AM GMT)

காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

புதுடெல்லி,

வெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீன வெளியுறவு மந்திரி சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர் பற்றி கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். ‘சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த பாதை இந்திய எல்லையில் பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் வருகிறது.

இதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா தனது உறுதியான வருத்தத்தை தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது உள்ள நிலையை மாற்றும் வகையில் வேறு எந்த நாடு முயன்றாலும் இந்தியா தயக்கமின்றி எதிர்க்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story