மின்கட்டண உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் வன்முறை


மின்கட்டண உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நடத்திய போராட்டத்தில் வன்முறை
x
தினத்தந்தி 11 Sept 2019 2:50 PM IST (Updated: 11 Sept 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

மின்கட்டண உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக இளைஞர் அணி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில்  மின்கட்டண உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  கொல்கத்தாவின் சென்ட்ரல் அவென்யூ பகுதியில்  நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.

பாஜக இளைஞர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள்  மின்சாரம் விநியோகிக்கும் கொல்கத்தா மின்சார விநியோக கழகத்தின் தலைமையகத்தை நோக்கி பேரணியாக அணிவகுத்து சென்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.  அப்போது பாஜக இளைஞர் அணியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

போலீசார் போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

Next Story