பிளாஸ்டிக் ஒழிப்பு: பாதகமான விளைவுகளை உருவாக்கும் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்


பிளாஸ்டிக் ஒழிப்பு: பாதகமான விளைவுகளை உருவாக்கும் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
x
தினத்தந்தி 11 Sept 2019 6:12 PM IST (Updated: 11 Sept 2019 6:12 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்று முன்னாள் சுற்றுச் சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சுற்றுச் சூழல் துறை  மந்திரி ஜெய்ராம் ரமேஷ்,  பிளாஸ்டிக் தடை செய்வதன் மூலம் அந்த தொழிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து அரசு யோசிக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளார். 

பிளாஸ்டிக்கை எப்படி மறுசுழற்சி செய்வது என்பது குறித்து அக்கறைக் கொள்ள வேண்டும் என்றும், பொருளாதார தேக்க நிலை உள்ள நிலையில் இந்த முடிவு பாதகமான விளைவுகளை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story