வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; புதுச்சேரி முதல் அமைச்சர் பேச்சு
வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் சேவகர்கள் என்பதனை அவர்கள் உணர வேண்டும். அதனாலேயே மாநில வளர்ச்சி உறுதி செய்யப்படும் என பேசினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, வளர்ச்சிக்கான பணிகளுக்கு இடமளிக்க வேண்டும். மாநிலம் வளரும்பொழுது, நாடு வளரும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். ஆனால் துரதிருஷ்டவச முறையில் இது நடைபெறவில்லை என பேசியுள்ளார்.
Related Tags :
Next Story