ராணுவ பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி
எதிரி நாட்டு ராணுவ பீரங்கிகளை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஆந்திரா,
ராணுவ பீரங்கிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை சோதனை ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்றது.
இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ பீரங்கிகளை தாக்கி அழிக்கும் இந்த 3-ம் தலைமுறை ஏவுகணைகளை ராணுவ வீரர் ஒருவர் சுலபமாக கையாண்டு செயல்படுத்தலாம். இதனால் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த ஏவுகணை சோதனையை வெற்றிபெற செய்த டி.ஆர்.டி.ஓ.க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story