”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு


”ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
x
தினத்தந்தி 12 Sep 2019 9:42 AM GMT (Updated: 12 Sep 2019 9:42 AM GMT)

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்

கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி,  "பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இழப்புகள் பெருகி வருகின்றன. பெருகிவரும் இழப்புகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப அரசு முன்னெப்போது இல்லாத  வகையில் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகிறது.

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. உத்தரவுகள் மிகவும் ஆபத்தான முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. காந்தி, படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உண்மையான செய்திகள், தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது" என பேசியதாக  கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

Next Story