காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் வந்த தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் பிடிபட்டனர்


காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் வந்த  தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:13 AM GMT (Updated: 12 Sep 2019 10:13 AM GMT)

காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 3 பேர் பிடிபட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில் ஆயுதங்கள், வெடிப்பொருட்களுடன் லாரி ஒன்று சிக்கியுள்ளது. 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர்.

காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்படுவதால் ராணுவம் உஷார் படுத்தப்பட்டு காஷ்மீரில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனையில் கத்துவா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் வந்த லாரி சிக்கியிருப்பதாக கத்துவா எஸ்பி தெரிவித்துள்ளார். அந்த ஆயுதங்கள் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் லாரியில் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூன்று பேரும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் எஸ்பி கூறியுள்ளார்.

Next Story