மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி


மோடி சொன்ன டிரெய்லர் கருத்து - ‘மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை’ - கபில்சிபல் பதிலடி
x
தினத்தந்தி 13 Sept 2019 10:56 PM IST (Updated: 13 Sept 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி சொன்ன டிரெய்லர் கருத்துக்கு, மீதி படத்தை பார்க்க விரும்பவில்லை என கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பயங்கரவாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பா.ஜனதா அரசின் 100 நாள் சாதனைகளை சமீபத்தில் பட்டியலிட்டிருந்த பிரதமர் மோடி, இது வெறும் ‘டிரெய்லர்’தான் எனவும், முழு படமும் இனிதான் வர இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மோடியின் இந்த கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவரான கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “பிரதமர் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை டிரெய்லர் இதுதான். இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அரசின் வருவாய் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு அரசின் வருமானம் 22 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தகுந்தது. பொதுமக்கள் நுகர்வோராக பொருள்களை வாங்குவது கடுமையாக குறைந்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிவு குறிப்பிடத்தக்கது. கடந்த 10 மாதங்களாக மோட்டார் வாகனங்களின் விற்பனை சரிந்து வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருமானம்,  இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடுகள் வரவு குறைந்துள்ளது. ஆனால், உத்தரபிரதேச மாநிலத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாங்கள் மீதமுள்ள மோடி குறிப்பிட்ட முழுப் படத்தையும் பார்க்க விரும்பவில்லை. டிரெய்லரை பார்த்ததே போதும்” என்று பதிவிட்டுள்ளார்.


Next Story