இந்தி பற்றிய அமித்ஷாவின் கருத்து: கூட்டாட்சி மீதான தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
இந்தி பற்றி அமித்ஷா தெரிவித்த கருத்து, கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமித்ஷாவின் இந்தி பற்றிய கருத்து பன்முகத்தன்மை மீதான தாக்குதல். இன்றைய தேவை மரியாதை தான். நமது நாட்டின் இயற்கையான பன்முகத்தன்மையை பாதுகாத்தாலே ஒருமைப்பாடு உறுதி செய்யப்படும். அவரது கருத்து ஆர்.எஸ்.எஸ். கொள்கையான கூட்டாட்சி முறை மீதான தாக்குதல்.ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவா கொள்கையின் ஒரு பகுதியான இந்தியை திணிக்க தொடர்ந்து முயன்றுவரும் மோடி-அமித்ஷா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். உண்மையில் இது தேசத்தை பிரித்துவிடும். இந்த மதவாத அரசு பிரிவினை அரசியலுக்காக மொழியை ஒரு கருவியாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story