ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை


ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் - உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2019 2:45 AM IST (Updated: 16 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட கதிதான் மம்தா பானர்ஜிக்கும் நேரிடும் என்று உத்தரபிரதேச எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்லியா,

அசாமில் வெளியிடப்பட்டு உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதற்காக அவருக்கு உத்தரபிரதேச பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சுரேந்திர சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி கூறி வரும் கருத்துகள் அனைத்தும், அவருக்கு பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதையே காட்டுகிறது. மோசமான நாட்கள் அவரை நோக்கி வருவதை மம்தா பானர்ஜி மறந்து விட்டார். அவர் தனது பேச்சு மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள கதிதான் அவருக்கும் ஏற்படும்’ என தெரிவித்தார்.

வங்காளதேளத்தில் இருந்து ஊடுருவியவர்களை பாதுகாப்பதன் மூலம் மம்தா பானர்ஜி அரசியல் செய்ய விரும்பினால், அவர் வங்காளதேசத்துக்குதான் பிரதமராக வேண்டும் என்றும் சுரேந்திர சிங் கூறினார்.

Next Story