சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை
சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த உள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அங்கு வதந்திகள் பரவி வன்முறை வெடிக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
370- சட்டப்பிரிவு ரத்துக்கு எதிராகவும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை நடத்துகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு, காஷ்மீர் தொடர்புடைய மேலும் சில மனுக்களையும் இன்று விசாரிக்கிறது.
அதேபோல், 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும், ஜம்மு-காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் திங்கள்கிழமை விசாரிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story