69-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து


69-வது பிறந்தநாள்: பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து
x
தினத்தந்தி 18 Sept 2019 12:00 AM IST (Updated: 18 Sept 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

69-வது பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து தெரிவித்தார்.

தர்மசாலா,

பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘இந்தியாவின் நீண்டகால விருந்தினராக, இந்தியா மீது அக்கறை கொண்டவனாக தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வெற்றி, இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே நன்மை பயப்பதாக உள்ளது’’ என்று தலாய்லாமா கூறியுள்ளார்.

Next Story