பிரதம மந்திரியின் பரிசு பொருட்கள் ஏலம்


பிரதம மந்திரியின் பரிசு பொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 18 Sept 2019 1:46 AM IST (Updated: 18 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டது.

புதுடெல்லி,

பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பரிசு பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருட்கள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏலம்விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

பிரதமரின் 2,700 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 3-ந் தேதி வரை இந்த ஏலம் நடக்கிறது. இந்த பொருட்களுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.2.5 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று நடந்த ஏலத்தில் வெள்ளி கலசம் மற்றும் மோடி படத்துடன் கூடிய போட்டோ ஸ்டேண்ட் ஆகியவை தலா ரூ.1 கோடிக்கு ஏலம் போனது.

அடிப்படை விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்ட போட்டோ ஸ்டேண்ட் 1 கோடியே 100 ரூபாய்க்கும், ரூ.18 ஆயிரம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட வெள்ளி கலசம் 1 கோடியே 300 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதுதவிர பசுவிடம் பால் குடிக்கும் கன்று உலோக சிலை ரூ.51 லட்சத்துக்கு ஏலம் போனது.


Next Story