தேசிய செய்திகள்

“காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள்” - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து + "||" + People wearing saffron robes committing rapes inside temples: Digvijaya Singh

“காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள்” - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து

“காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள்” - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்து
காவி அணிந்தவர்கள் கற்பழிக்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் துறவிகள் மத்தியில் பேசியதாவது:-

முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிக பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது மக்கள் காவி அங்கி அணிந்துகொண்டு போலி மருந்து விற்கிறார்கள். காவி அங்கிகளில் கற்பழிப்புகள் நடக்கிறது. கோவில்களில் கற்பழிப்புகள் நடக்கிறது. இதுபோன்ற செயல்களால் சனாதன தர்மத்துக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. இதுதான் நமது மதமா? கடவுள் இதுபோன்ற மக்களை மன்னிக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பா.ஜனதா தலைவர் சுவாமி சின்மயானந்த் மீது சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு புகார் கூறியுள்ள சூழ்நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.