பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்தியா


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்தியா
x
தினத்தந்தி 18 Sep 2019 3:58 AM GMT (Updated: 18 Sep 2019 3:58 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது.

ஜம்மு,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹாஜிபிர் பிரிவில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் நாட்டின் அதிரடி எல்லை படையினர் ஊடுருவ முயன்றுள்ளனர்.  இந்திய பாதுகாப்பு படையினர் ராக்கெட் எறிகுண்டுகளை வீசி அவர்களின் ஊடுருவல் முயற்சியை முறியடித்து உள்ளனர்.

ஊடுருவல் முயற்சியை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை உள்ளே அனுப்ப அந்நாடு முயற்சித்து வருகிறது.  கடந்த ஆகஸ்டில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் 15 ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தடுத்து முறியடித்தது.

Next Story