கடந்த 30 மாதங்களில் உத்தரபிரதேசத்தில் எந்த கலவரமும் இல்லை- முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் கலவரம் ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
லக்னோ
உத்தரபிரதேச முதலவர் யோகி ஆதித்நாத் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது பதவிக் காலத்தின் முதல் 30 மாதங்களில் தனது அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டார்.
யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
பாஜக அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. 2017 மார்ச் முதல் அனைத்து பண்டிகைகளும் உ.பி.யில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டன.
பாஜக ஆட்சியில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து விட்டன. வழிப்பறி 54 சதவீதம் குறைந்துள்ளது. பாலியல பலாத்கார சம்பவங்கள் 36 சதவீதம் குறைந்து உள்ளது. கொலை வழக்குகள் 15 சதவீதம் குறைந்து உள்ளது. கொள்ளை 45 சதவீதமும், கடத்தல் 30 சதவீதமும், கலவரம் தொடர்பான சம்பவங்கள் 38 சதவீதம் குறைந்து உள்ளன.
முதல்வர் தனது பதவிக் காலத்தில் உ.பி. அதன் "அடையாள நெருக்கடியிலிருந்து" வெளியேற்றப்பட்டதாகவும் கூறினார்.
Related Tags :
Next Story