விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தகவல்


விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2019 12:21 PM GMT (Updated: 19 Sep 2019 12:21 PM GMT)

விக்ரம் லேண்டர் தொடர்பு இழந்தது எப்படி என ஆய்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் 14 நாள்கள் மட்டுமே என்பதால்,  நாளையுடன் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம் முடிவடைய உள்ளது.  எனவே இனி லேண்டரை பயன்படுத்த முடியுமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. 

இந்த நிலையில், விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்பிட்டர் மூலம் நிலவு குறித்த ஆய்வு தொடரும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

Next Story