மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பதற்றம்


மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு: ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில்  பதற்றம்
x
தினத்தந்தி 19 Sep 2019 4:18 PM GMT (Updated: 19 Sep 2019 4:18 PM GMT)

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

கொல்கத்தா, 

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து அந்த மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  

இதற்கிடையே, மாணவ அமைப்பினரால் தான் தாக்கப்பட்டதாக பாபுல் சுப்ரியோ குற்றம் சாட்டினார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு  பாபுல் சுப்ரியோ அளித்த பேட்டியில்  கூறியதாவது;- நான் அங்கு அரசியல் செய்ய வரவில்லை. ஆனால், பல்கலைக்கழகத்தில் சில மாணவர்களின் செயல்பாடு எனக்கு வருத்தம் அளிக்கிறது. சிலர் என் தலைமுடியை  இழுத்து தாக்கினார்” என்றார். 

Next Story